அஜீத்தின் 'வேதாளத்திற்கு உதவிய ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Thursday,September 24 2015]

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 'வேதாளம்' டைட்டிலை அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரும் என்ற அறிவிப்போடு ஃபர்ஸ்ட்லுக்கும் வெளிவந்துள்ளதால் அஜீத் ரசிகர்களின் சந்தோஷம் இருமடங்காகி உள்ளது.

இந்நிலையில் 'வேதாளம்' படத்தின் டைட்டிலை முதலில் பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அஜீத் படக்குழுவினர் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது எந்தவித மறுப்பும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி 'வேதாளம்' டைட்டிலை அஜீத் படத்திற்கு பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸின் பெருந்தன்மையை 'வேதாளம்' படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்துள்ள 'வேதாளம்' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 'வீரம்' சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

More News

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்திய அஜீத் ரசிகர்கள்

அஜீத்துக்கு சமூகவலைத்தளங்களில் பெரும்புகழ் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அஜீத் பட செய்திகளோ...

'புலி'-ஜிங்குலியா புரமோ பாடல் விமர்சனம்

நேற்று ஒரே நாளில் இளையதளபதி விஜய்யின் 'புலி' இரண்டாவது டிரைலர் மற்றும் தல அஜீத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்...

கிருமி- திரைவிமர்சனம் : யதார்த்த சாயல் கொண்ட கமர்ஷியல் படம்

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வணிகரீதியாகவும்...

சிவாஜி கணேசன் வீட்டில் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் ஒருபக்கம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள...

'தல 56' படத்தின் டைட்டில் 'வேதாளம்'

அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'தல 56' படத்தின் டைட்டில் ஒருவழியாக வெளிவந்து சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...