எதைக் கேட்டாலும் இல்லைங்கிற.. யாருடி நீ? கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,October 17 2024]

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியான நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு திருடர்கள் கீர்த்தி சுரேஷிடம் இருந்து பேக்கை பறித்து கொண்டு செல்கின்றனர். தங்களுடைய இருப்பிடத்திற்கு சென்று அந்த பேக்கை சோதனை செய்தபோது, அதில் துப்பாக்கி, ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் பாம் உள்ளன.

இதனை அடுத்து அங்கு வரும் கீர்த்தி சுரேஷிடம், நீங்க யாருங்க? அண்டர்கிரவுண்ட் போலீசா? என ஒருவர் கேட்க, மற்றொருவர் அக்கா, நீங்க பெரிய டானா என்று கேட்கிறார். அதற்கு கீர்த்தி சுரேஷ் இல்லை என்று பதிலளிக்கிறார். அப்போது மற்றொருவர் எதைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்ற, யாருடி நீ? என்று கேட்க, பிளாஷ்பேகில் கீர்த்தி சுரேஷ் ரிவால்வரை எடுத்து சுடும் காட்சிகளுடன் இந்த டீசர் முடிவடைகிறது.

கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சந்துரு இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இன்றைக்கு கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் வீட்டில் இன்று.. யார் கெத்து? நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்.. முட்டி மோதும் போட்டியாளர்கள்..

பிக் பாஸ் வீட்டில் யார் கெத்து என்ற நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் இன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் முட்டி மோதி வரும் காட்சிகள்

'புதிய தொடக்கம்'.. திருமணத்திற்கு பின் நல்ல செய்தி சொன்ன ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்.

இந்த வாரம் எத்தனை தமிழ் படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் OTTயில் வெளியாகி வருகின்றன

எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்.?

பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தானம் மற்றும் தர்மம் பற்றியும், ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

⚜️முருகரிடம் சென்றால் நம் விதியை மாற்ற முடியுமா.? - Jeevitha சுரேஷ்குமார்

பிரபல ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சியாளரும், "The Great Indian கிட்சேன்" படத்தின் எழுத்தாளருமான ஜீவிதா சுரேஷ்குமார்