நாளை முதல் டிக்கெட் கட்டண மாற்றம்: ரோஹினி தியேட்டர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி ஆகியவை காரணமாக சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.207 என்று அதிகபட்சமாக இருப்பதால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது.

இந்த கட்டண ஏற்றத்தால் மெர்சல்' போன்ற பெரிய படங்களின் ஓப்பனிங் வசூல் பாதிக்காது என்றாலும் சிறிய படங்களின் வசூல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் ஆன்லைன் பைரஸிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான ரோஹினி திரையரங்கத்தில் நாளை முதல் புதிய கட்டண முறை கடைபிடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் கட்டணம் ரூ.160 என்றும், சனி, ஞாயிறு தினங்களில் தமிழ்ப்படங்களுக்கு ரூ.180, மற்ற மொழி படங்களுக்கு ரூ.190 என்றும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றத்தால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்