பணியில் இருந்த பெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயி: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

தெலுங்கானா மாநிலத்தில் பணியில் இருந்த பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அப்துல்லாபூர்ரெட் என்ற பகுதியில் விஜயா ரெட்டி என்ற பெண், தாசில்தார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரை பார்க்க சுரேஷ் ஒரு விவசாயி அடிக்கடி வந்து கொண்டிருந்தார். அவர் நில விவகாரம் தொடர்பாக விஜயா ரெட்டியை பார்க்க வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்றும் அதே போல் பெண் தாசில்தாரை பார்க்க சுரேஷ் அவருடைய அறைக்கு சென்று உள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டு, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் உள்ளே போய் பார்த்தபோது, பெண் தாசில்தார் உயிரோடு எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வரும் முன்னரே அங்கு உள்ள ஊழியர்கள் தாசில்தார் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய சுரேஷ் என்ற விவசாயி தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில் பெண் தாசில்தார் லஞ்சம் கேட்டதால் அவரை உயிரோடு கொளுத்தியதாக சுரேஷ் கூறியதாக தெரிகிறது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு 'விஜய்சேதுபதி' என டைட்டில்!

நடிகர்களின் பெயரிலேயே ஒரு திரைப்படத்தின் டைட்டிலும் அமைவது என்பது திரையுலகில் மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வு ஆகும். 'அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற ஒருசில படங்கள் மட்டுமே

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த சூப்பர் அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்

குழந்தை தத்தெடுக்கும் பிக்பாஸ் நடிகை

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தற்போது பிசியாக உள்ளனர்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் நடிகை!

கடந்த இரண்டு நாட்களாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் எந்த மதம்? அவருடைய உடை எந்த வண்ணம்? என திராவிட கட்சிகளும் பாஜகவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'தளபதி 64' படப்பிடிப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் பத்தே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது