ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 4 மணிக்கு முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Monday,December 17 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்று சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள சசிகுமார் கேரக்டர் குறித்த தகவல் புதிய போஸ்டருடன் வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சன் பிக்சர்ஸ்' சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷாவின் கேரக்டர் 'சரோ' என்றும், விஜய்சேதுபதியின் கேரக்டர் 'ஜித்து' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.