அம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு பெரும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் கருதப்படும் நிலையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏற்கனவே மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது என்பதும் அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ரேவதியின் கணவர் அளித்த பேட்டியின் போது ’இரவு 10 மணி அளவில் தொலைபேசியில் என்னிடம் பேசிய எனது மனைவி ’தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் எனது மனைவி தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார்
மேலும் நள்ளிரவு இருவரையும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறிய ரேவதி என்னிடம் கூறினார். சம்பவம் நடந்தபோது தான் பணியில் இருந்ததால் தனக்கும் சிக்கல் வரும் என்று ரேவதி என்னிடம் போனில் வருத்தப்பட்டபோது அவருக்கு நான் ஆறுதல் கூறினேன்
மேலும் போலீசாரால் அடிக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு எனது மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த வழக்கு குறித்து சாட்சி அளிக்க எனது மனைவி சென்ற போது எனது மூத்த மகள், ‘அம்மா தைரியமாக உண்மையை சொல்லும்மா என்று கூறினார். இந்த வழக்கு குறித்தும் உண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது என்பது குறித்தும் எனது மூத்த மகளுக்கு தெரியாது என்றாலும் அவர் தனது தாயாருக்கு தைரியம் கூறியதாகவும் ரேவதியின் கணவர் கூறினார்
மேலும் இந்த வழக்கில் எங்கு வேண்டுமானாலும் தனது மனைவி உண்மையை சொல்ல தயாராக இருக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேவதியின் கணவரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout