'அறம்' போன்ற படங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்: நடிகை ரேவதி கோரிக்கை

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சி இந்த படத்தை பார்த்த நடிகை ரேவதி, படக்குழுவினர்களுக்கு பாராட்டி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

'அறம்' பட இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அனனவருக்கும் முதலில் நன்றி கூறி கொள்கிறேன். திரைப்பட மொழியை மிக அழகாக பயன்படுத்தி உள்ளனர். நம் நாடே சரியாக இல்லை. மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை அனைவரையும் கூறலாம். குறிப்பாக  நல்ல மனம் கொண்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் மிகவும் குறைவு. அவர்களால் இந்த பெரிய நாட்டில் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. 

குழந்தைகளுக்கு இந்த நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கின்றது. அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சினிமாவில் சொல்ல முடிந்தால் இன்னும் நிறைய மக்களை போய் சேரும். அந்த வகையில் இந்த 'அறம்' படம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த மாதிரி படங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஊக்கம் கொடுத்தால்தான் இதுபோன்ற படங்கள் நிறைய வரும்' என்று கூறியுள்ளார்.

More News

மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் கமல் இன்று சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கிய அரசியல்வாதிகளையும் பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பிரபல கவர்ச்சி நடிகையின் தாயார் காலமானார்

குசேலன்', 'குரு என் ஆளு', 'ஒன்பதுல குரு' உள்பட பல படங்களில் நடித்தவரும், 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தவர் நடிகை சோனா. இவருடைய தாயார் இன்று அதிகாலை காலமானார்.

'மெர்சலுக்கு' அடுத்து தினகரனை விளம்பரம் செய்கிறது மத்திய அரசு: மயில்சாமி

தற்போது மத்திய அரசே அனைத்து விஷயங்களையும் தானே விளம்பரம் செய்து வருவதாகவும், மெர்சல் விஜய்யை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தது போல்

அனிதா பிறந்த மாவட்டத்திற்கு விஜய்சேதுபதி கொடுத்த ரூ.50 லட்சம் நன்கொடை

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் லோகோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்

நடிகை நமீதா திருமணம்: உறுதி செய்த பிக்பாஸ் ரைசா

பிரபல நடிகையும், பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நமீதா, அவருடைய காதலரை திருமணம் செய்யவுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளர்களான ரைசா தெரிவித்துள்ளார்.