3013ஆம் ஆண்டுக்கு டிக்கெட் கொடுத்த ரயில்வே துறைக்கு அபராதம்

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு ரயில் பயணிக்கு 3013ஆம் ஆண்டுக்கான டிக்கெட்டை ரயில்வே நிர்வாகம் தவறாக கொடுத்திருந்தது. அந்த பயணியிடம் சரியான டிக்கெட் இல்லை என்று அபராதம் விதித்தது மட்டுமின்றி நடுவழியில்ல் இறக்கி விட்டதற்காக ரயில்வே துறைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

உபி மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் விஷ்ணுகந்த் என்பவர் கடந்த 2013ஆம் சஹரான்பூரில் இருந்து ஜான்பூருக்கு ஹிம்கிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல டிக்கெட் எடுத்திருந்தார். அவரது டிக்கெட்டை பரிசோதனை செய்த டிடிஆர், விஷ்ணுகாந்த் வைத்திருந்த டிக்கெட்டில் 2013 என்ற ஆண்டுக்கு பதிலாக 3013 என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அந்த டிக்கெட் போலியானது என்று கூறி விஷ்ணுகாந்துக்கு அபராதம் விதித்ததோடு அவரை வயதானவர் என்றும் பாராமல் நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார.

இதனால் மனவேதனை அடைந்த விஷ்ணுகாந்த் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புல் ஆண்டை தவறாக ரயில்வே நிர்வாகம் அச்சிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதால் மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.13ஆயிரம் ரயில்வே நிர்வாகம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது.