ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ : விஜய் வரி வழக்கு குறித்து முன்னாள் நீதிபதி கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரிவிதிப்பு குறித்த வழக்கில் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ என்ற கருத்து தேவை இல்லாதது என முன்னாள் நீதிபதி ஒருவர் கருத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இங்கிலாந்து நாட்டில் இருந்து நடிகர் விஜய் சமீபத்தில் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சினிமாவில் ரீல் ஹீரோவாக இருந்தால் மட்டும் போதாது, ரியல் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்றும், வரி கட்டுவது ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு என்றும், வரி கட்டுவதை நன்கொடை கொடுப்பது போல் கருதக்கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. அதேபோல் விஜய்க்கு ஆதரவாகவும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் வரி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் பேட்டி ஒன்றில் கூறிய போது ’இந்திய அரசியல் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் வரிவிலக்கு கேட்கலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், வரிவிலக்கு கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள், கொடுக்கவில்லை என்றால் வரி கட்டி விடுவார்கள் என்றும் இதற்காக ரியல் ஹீரோ, ரீல் ஹீரோ என்ற கருத்து தேவையில்லாதது என்றும் கூறினார்
ஆரம்பத்தில் பாண்டிச்சேரியிலிருந்து வாகனங்கள் வாங்கி தமிழகத்திற்கு கொண்டு வந்ததால் தமிழகத்திற்கு வரி வருமானம் குறைந்தது என்றும் அதனால்தான் நுழைவு வரி என்ற சிஸ்டமே வந்தது என்றும் ஆனால் விஜய் பாண்டிச்சேரியிலிருந்து கார் வாங்கவில்லை என்றும், இங்கிலாந்திலிருந்து கார் வாங்கி முறையாக இறக்குமதி வரி கட்டி கொண்டு வந்துள்ளார் என்றும் அதற்கு நுழைவு வரி தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என்றும் கூறியுள்ளார்
மேலும் விஜய் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர் வரி விலக்கு கேட்டு வாதிட அவருக்கு உரிமை உள்ளது என்றும் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அபராதம் விதிக்கலாம் என்றும், அதற்காக அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது தேவையில்லாதது என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
நான் ஒருவேளை இந்த வழக்கின் நீதிபதியாக இருந்தால் இந்த மாதிரி தீர்ப்பை கொடுத்திருக்க மாட்டேன் என்றும் இந்த வழக்கில் சமூக நீதியை எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரிதான், ஆனால் வரி வசூலிப்பதில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்றும், விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் ஒருவேளை விஜய் தரப்பில் இரண்டு நீதிபதிகளிடம் அப்பீல் போட்டால் தீர்ப்பளித்த நீதிபதியின் கருத்து எல்லாம் ரத்து செய்வது விடுவார்கள் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout