காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் என்பவர் உடல்நலமின்றி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் காலை 11 மணி அளவில் ரயில்முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தியால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வரலட்சுமி, சிறிது நேரம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் மாலை 4 மணியளவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் அவரது மனைவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் இருவரது பிணத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சுதாகர்-வரலட்சுமி தம்பதிகளுக்கு சந்தீப் என்ற மகனும், சவீதா என்ற மகளும் உள்ளனர். இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குரங்குக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட்

ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர்கள் அந்த பேருந்தின் டிரைவர் கையில்தான் இருக்கும். அந்த பொருப்பை உணர்ந்து டிரைவர்கள் தனது பணியை செய்ய வேண்டும்

திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் காலியான திருவாரூர் தொகுதிக்கும், ஏ.கே.போஸ் மறைவினால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க: பிக்பாஸ் ஆர்த்தி

சமீபத்தில் அஜித் பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தபோது தன்னை வீடியோ எடுக்க முயன்றவரை அன்புடன் தடுத்தார் என்றும் அவர் பணிவாக கூறிய விதம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

கடல் கடந்த அங்கீகாரம் பெற்ற ஜிவி பிரகாஷ் படம்

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். நாயகனாக நடிப்பது மட்டுமின்றி அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இசையும் அமைத்து வருகிறார்

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் கமல் பட இயக்குனர்

கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய படம் 'பாபநாசம்'. மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.