சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருக்கும்? புதிய விதிமுறைகள்!!!
- IndiaGlitz, [Wednesday,December 30 2020]
2020 ஒரு வழியா முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் கொரோனா தாக்கத்தால் கடும் அவதிப்பட்ட மக்கள் புத்தாண்டு பெயரில் மீண்டும் ஆபத்துக்களை சந்தித்து விடக்கூடாது என்பதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு இப்போதே துவங்கி விட்டது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி காவல் துறை வரும் 2021 புத்தாண்டு கொண்டாட்டதிற்கு பல புதிய கட்டப்பாடுகளை விதித்து இருக்கிறது.
அதன்படி சென்னை முழுவதும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூடவும் உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் முழுவதும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் எனவும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதோடு சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்களும் நாளை இரவு முதல் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் தறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.