சசிகலா நியமனம் ரத்து: தினகரன் நியமனங்கள் செல்லாது: அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்
- IndiaGlitz, [Tuesday,September 12 2017]
அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்க தினகரன் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து இன்று காலை அதிமுக பொதுக்குழு சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் முறைப்படி பொதுக்குழுவை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானமாக அதிமுகவின் இரட்டை இலையை மீட்பது என்றும் அடுத்த தீர்மானமாக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மேலும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினகரன் இதுவரை செய்த நியமனங்கள் செல்லாது என்றும் பொதுகுழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இதுவரை இயற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள்
தீர்மானம் 1. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும்..
தீர்மானம் 2 - ஜெயலலிதா இருந்த போது அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும்..
தீர்மானம் 3 - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்..
தீர்மானம் 4 - ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
தீர்மானம் 5 - வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு..
தீர்மானம் 6 - விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி..
தீர்மானம் 7 - எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியை யாராலும் நிரப்ப முடியாது