ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி.....! பிரபல சீரியல் நடிகையின் திருமணம் குறித்த அப்டேட்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா முரளிதரன் தன்னுடைய திருமணம் குறித்த அப்டேட்டை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மாடலிங் துறையை சேர்ந்த கேரளப்பெண் தான் ரேஷ்மா முரளிதரன். கடந்த 2016-இல் மிஸ் மெட்ராஸ் போட்டியில் பங்கேற்று, 3-ஆம் இடம் பிடித்தார். சென்னையில் பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட ரேஷ்மாவிற்கு முதன் முதலாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியார் சேனல் ஒன்றில் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான இவர், பின்பு "பூவே பூச்சூடவா" என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானார். இதில் துருதுருவென்று வரும் சக்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 1000 எபிசோட்களை கடந்தும், இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது கலர்ஸ் தமிழில் "அபி டெயிலர்" என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ரேஷ்மா, மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலித்து வருவது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அபி டெயிலர் சீரியலில் கூட இவருக்கு ஜோடியாக மதன் தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தனது காதலனுடன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா, தற்போது அவருடைய திருமணம் குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடும் ரேஷ்மா, அண்மையில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். "முக்கியமான நாள்....விரைவில்...." என மதனின் புகைப்படத்துடன் திருமண அப்டேட்டை பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments