இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவி… மீண்டும் ஒரு அசத்தல் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல அசத்தலான செயல்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக 21 வயதில் ஒரு கல்லூரி மாணவி மேயராக அறிவிக்கப்பட்டு இருந்தார். திருவனந்தப்புரத்தின் மேயராகப் பொறுப்பேற்று இருக்கும் 21 வயது ஆர்யா ராஜேந்திரன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் செயல்பட்டு வருவதோடு ஒரு பொறியியல் கல்லூரி மாணவியாகவும் இருந்து வருகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரளாவில் இன்னொரு ஆச்சர்ய சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. பத்தினம் திட்டம் மாவட்டம் அருவப்புலம் பகுதியின் பஞ்சாயத்து தலைவராக 21 வருடங்களே பூர்த்தியான ஒரு இளம் கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். பி.ஏ இளங்கலை படித்து வரும் கல்லூரி மாணவி ரேஷ்மா மரியம் ராய் கடந்த 1999 ஆம் வருடம் நவம்பர் 18 ஆம் தேதி பிறந்தவர். பத்தினம் திட்டம் மாவட்டத்தின் SFI மாணவர் செயலாளராக பணியாற்றியும் வருகிறார். தற்போது பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துக்கு இருக்கும் அம்மாணவி என்னுடைய உயர்படிப்பை நான் தொலைத்தூர கல்வி முறையில் பயின்று கொள்வேன். இப்போதைக்கு சமூக நலன்தான் முக்கியம். என்னுடைய பகுதியில் உள்ள மேம்பாலங்களை சரிசெய்யவேண்டும். அதற்கு கட்சியோடு சேர்ந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments