ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சினிமா பார்க்காதீர்கள்: நயன்தாரா பட இயக்குனரின் சர்ச்சை பதிவு..!
- IndiaGlitz, [Saturday,April 01 2023]
சினிமாவுக்கு லோன் வழங்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இனி சினிமாவை பார்க்க வேண்டாம் என இயக்குனர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
’நேரம்’ ’பிரேமம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’கோல்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பதிவு செய்து வருவார்.
சமீபத்தில் கூட அவர் அஜித்தை சந்திக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் ’ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சினிமாவுக்கு கடன் வழங்கவில்லை என்பதால் அந்த வங்கியின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இனிமேல் சினிமா பார்ப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இந்த முடிவை எடுத்த நபர்கள் அல்லது அமைச்சர் ஆகியோர்களுக்கும் சினிமா பார்க்க உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பசுவின் வாயை மூடிவிட்டு பால் குடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் நமது பிரதமர் மோடி அவர்கள் சினிமாவை கொன்று குவிக்கும் இது போன்ற பிரச்சனையை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.