அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அன்றைய தினம் முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்து வந்தனர். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இன்று கடைசி தினம் என்பதால் பெரும்பாலான வங்கிகளில் பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய கூட்டம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. இதன்படி கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் விவரங்களை மின்னஞ்சலில் இன்று இரவுக்குள் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், டெபாசிட் மூலம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை நாளை இரவுக்குள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையில் பல புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments