அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அன்றைய தினம் முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்து வந்தனர். இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இன்று கடைசி தினம் என்பதால் பெரும்பாலான வங்கிகளில் பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய கூட்டம் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. இதன்படி கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் விவரங்களை மின்னஞ்சலில் இன்று இரவுக்குள் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், டெபாசிட் மூலம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை நாளை இரவுக்குள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையில் பல புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

சென்னை எஸ்பிஐ வங்கியில் தீவிபத்து. வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதிப்பு வருமா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் இன்று காலை 9 மணிக்கு திடீரென தீ விபத்து...

வாய்ப்பு கிடைத்தால் கருணாநிதியை சந்திப்பேன். நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் 12 ஆண்டுகாலமாக அதிமுகவில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவில் இருந்து விலகினார்...

இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு...

தோனியின் வெற்றியை அடுத்து வெளிவரும் 'சச்சின்'

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியாக வாய்ப்பே இல்லை என்று செய்தி வெளியிடுகிறது.