கொரோனா நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய நிவாரண அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை ஊரடங்கு முடிந்து பணியாற்றுவதில் கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிவரும். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்பு வெளியாகி பலத் தரப்புகளில் இருந்து பாராட்டுகளை பெற்றுவருகிறது.
NBFC, MFI போன்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தற்போது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுகுறு நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு முன்னதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா முடிந்து நிலைமையை சமாளிக்க NBFC, MFI போன்ற குறு நிறுவனங்கள் பெருமளிவிலான கடனை வாங்க இருக்கின்றன. எனவே சிறு, குறு நிறுவனங்களில் தொழில் பெருக்கத்திற்காக ரூ.50,000 கோடி ரூபாய் தொகுப்புதவியாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். மேலும், பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கு 60 விழுக்காடு வரை அவசர கடன் வழங்கப்பட இருக்கிறது. இதில் ரிவர்ஸ் ரெப்கோ விகிதம் 0.25% ஆக குறைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கான ரெப்கோ வட்டிவிகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்த விகிதம் ஜி20 அமைப்பில் இருக்கும் உறுப்பு நாடுகளை பொறுத்தவரை அதிகமாகவே இருக்கிறது. ஊரடங்கு காலத்தின்போது நாடு முழுவதும் இணையவழி பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. பண நோட்டுகள் தட்டுபாட்டை தவிர்ப்பதற்காக வங்கிகள் போதுமான நோட்டுகளை கையிருப்பில் வைத்திருக்கின்றன.
கொரோனா பரவல் நேரத்தில் இந்தியாவில் மின்சார நுகர்வு 20-25% வரை குறைந்திருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடாக அதிகரித்துக் காணப்படும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். ஊரடங்கு காலங்களில் தேவையான அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout