கொரோனா நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்!!!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய நிவாரண அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை ஊரடங்கு முடிந்து பணியாற்றுவதில் கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிவரும். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்பு வெளியாகி பலத் தரப்புகளில் இருந்து பாராட்டுகளை பெற்றுவருகிறது.

NBFC, MFI போன்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தற்போது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுகுறு நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு முன்னதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா முடிந்து நிலைமையை சமாளிக்க NBFC, MFI போன்ற குறு நிறுவனங்கள் பெருமளிவிலான கடனை வாங்க இருக்கின்றன. எனவே சிறு, குறு நிறுவனங்களில் தொழில் பெருக்கத்திற்காக ரூ.50,000 கோடி ரூபாய் தொகுப்புதவியாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். மேலும், பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கு 60 விழுக்காடு வரை அவசர கடன் வழங்கப்பட இருக்கிறது. இதில் ரிவர்ஸ் ரெப்கோ விகிதம் 0.25% ஆக குறைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கான ரெப்கோ வட்டிவிகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்த விகிதம் ஜி20 அமைப்பில் இருக்கும் உறுப்பு நாடுகளை பொறுத்தவரை அதிகமாகவே இருக்கிறது. ஊரடங்கு காலத்தின்போது நாடு முழுவதும் இணையவழி பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. பண நோட்டுகள் தட்டுபாட்டை தவிர்ப்பதற்காக வங்கிகள் போதுமான நோட்டுகளை கையிருப்பில் வைத்திருக்கின்றன.

கொரோனா பரவல் நேரத்தில் இந்தியாவில் மின்சார நுகர்வு 20-25% வரை குறைந்திருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடாக அதிகரித்துக் காணப்படும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். ஊரடங்கு காலங்களில் தேவையான அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

More News

கொரோனாவிற்கு அதிகளவு நிவாரண நிதியை அள்ளிக்கொடுக்கும் நாடுகள்!!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகநாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது

திருப்பூர் கேரம்போர்டை அடுத்து சேலத்தில் நடந்த ட்ரோன் காமெடி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சிலர் மதிக்காமல் வெளியில் சென்று விளையாடிக்கொண்டு இருப்பதை போலீசார் ட்ரோன்

உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

திரும்பவுமா??? கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் கொரோனா பாதிப்பு!!!

முன்னதாக ஒருவரது உடலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டால் அவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியம்

பிரபல நடிகை ஆரம்பித்து வைத்த 'பில்லோ சேலஞ்ச்': வைரலாகும் புகைப்படங்கள்

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே. ஐஸ்கட்டி குளியல் சேலஞ்ச் முதல் பல சேலஞ்சுகள் இதுவரை டிரெண்ட் ஆகியுள்ள நிலையில்