இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ஒருசில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தற்போது பார்ப்போம்.
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.40% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் 0.75% குறைப்பு என்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் குறைப்பு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறையும் என்றும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது என்றும் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுனர், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout