close
Choose your channels

யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது....! காரணம் இதுதானாம்....!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு, வீரப்பன் குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கு இணங்க, தலைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராட்சசி பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கதையைத்தான், அறிமுக இயக்குனர் யாசின் திரைப்படமாக எடுத்து வருகிறார். "ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ்" பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிப்பில், 'வீரப்பன் கஜானா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நாயகனாகவும், மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் சிறியவர்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்கும் நோக்கத்துடனும், அதை சுவாரசியமாக சொல்லும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்டதாகும். வீரப்பன் கஜானா என பெயரிடப்பட்டுள்ளதால், மறைந்த வீரப்பன் அவர்களின் குடும்பத்தார், அவரின் பெயரை படத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வீரப்பனுக்கும், கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிய படக்குழு, படதலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்ததால், டப்பிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.விரைவில் படத்திற்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் படக்குழு சார்பாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment