பாராளுமன்ற தேர்தலில் ரஜினிக்கு எத்தனை தொகுதி? ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் செய்து வரும் நிலையில் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்துள்ளது. மேலும் தனக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை ரஜினி போட்டியிட்டால் அவருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ரிபப்ளிக் டிவி ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவின்படி ரஜினி கட்சிக்கு 23 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும், அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளும் கிடைக்கும் என கணித்துள்ளது. அதேபோல் தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு 255 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 68 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதே ரீதியில் சட்டமன்ற தேர்தலிலும் வாக்குகள் விழுந்தால் ரஜினி ஆட்சி அமைப்பது நிச்சயம் என தெரிகிறது. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments