இந்தியக் கிரிகெட் அணியில் சச்சின்? பிசிசிஐ கொடுக்கப்போகும் பதவி என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,January 12 2022] Sports News
16 வயதில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்து கிரிக்கெட்டில் உலகில் புது சாம்ராஜ்யத்தையே படைத்தவர் சச்சின் டெண்டல்கர். நீண்டநாட்களுக்குப் பிறகு இவரை பிசிசிஐ இந்தியக் கிரிக்கெட் அணிக்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதனால் பெரும் முயற்சி எடுத்தும் வரும் நிலையில் சச்சினுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆலேசாகர் பதவி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இணைந்து 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவுகளுக்கும் தனித்தனிப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐயின் செயல்தலைவர் ஜெய்ஷா சச்சின் டெண்டுல்கருடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற முன்னணி வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகியுள்ளனர். மேலும் பல புதிய வீரர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இந்தியக் கிரிக்கெட அணிக்கு சச்சின் டெண்டுல்கர் மென்ட்ராக நியமிக்கப்படலாம். இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி மீண்டும் புத்துயிர் பெற்றுவர முடியும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.