பிக்பாஸ் வழக்கு: ஐகோர்ட்டில் கமல் தரப்பு பதில்
- IndiaGlitz, [Friday,August 11 2017]
கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் திடீரென ஒரே வாரத்தில் ஓவியா மற்றும் ஜூலி வெளியேறியதால் தற்போது களையிழந்து வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கமல்ஹாசன், டிவி நிர்வாகம், பிக்பாஸ் டீம் ஆகியோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கமல் தரப்பில் இருந்து இன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு என்றும், மத்திய அரசு மற்றும் கண்காணிப்பு குழு மட்டுமே இந்த நிகழ்ச்சி குறித்து ஆராய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு ஒருவாரம் அவகாசம் கொடுத்த சென்னை ஐகோர்ட் வழக்கை ஒத்தி வைத்தது.