'ரெமோ' தயாரிப்பாளரின் புத்திசாலித்தனமான ஐடியா

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

தமிழ் திரையுலகினர்களுக்கு சவால் கொடுக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி என்னும் அரக்கர்கள்தான். என்னதான் சட்டங்கள் போட்டு விழிப்புடன் இருந்தாலும், ரிலீஸ் ஆன முதல் நாளே திருட்டி டிவிடிக்கள் பஜார்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது. அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். முதல் காட்சி முடிந்தவுடனே திருட்டு டிவிடிக்கள் கிடைக்கின்றது.
இந்நிலையில் இந்த திருட்டு டிவிடிக்களுக்கு மிக முக்கிய காரணம் வெளிநாடுகளில் முந்தைய நாள் இரவே படத்தை ரிலீஸ் செய்வதுதான் என்று கூறப்படுகிறது. முந்தைய நாள் காட்சியிலேயே பதிவு செய்து திருட்டு டிவிடிக்களை உருவாக்கி வருவதால்தான் தமிழகத்தில் முதல் நாளே திருட்டு டிவிடிக்கள் கிடைக்கின்றது.
இதனால் 'ரெமோ' தயாரிப்பாளர் ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை கடைபிடிக்கவுள்ளார். இந்த படம் வெளிநாடுகளில் முந்தைய நாட்களில் பிரிவியூ காட்சி உள்பட எந்த காட்சியும் கிடையாது என்றும் தமிழகத்தில் ரிலீஸ் ஆன மறுநாள்தான் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனால் மற்ற தயாரிப்பாளர்களும் இதை கடைபிடிக்கலாம்.

More News

பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆன உதயநிதி திரைப்படம்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன்' திரைப்படமும், எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு ...

அஜித் பாணியில் விஜய்சேதுபதி

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

இன்று செவலியே கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறிய பிரபலங்கள்

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு இன்று கோலிவுட் திரையுலகினரும்...

செவாலியே விருது : கமல்ஹாசனுக்கு அமெரிக்கா பாராட்டு

பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வென்ற கமல்ஹாசனுக்கு பல்வேறு...

தர்மதுரை', 'ஜோக்கர்', 'கபாலி' படங்களின் சென்னை வசூல் நிலவரம்

சுதந்திர தின விடுமுறை வாரத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் புதிய மற்றும் அதற்கு முன்னர்...