சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தொலைக்காட்சியில் இருந்து திரையுலகிற்கு வந்து ஐந்தே வருடங்களில் பத்தே படங்களில் மட்டும் நடித்து ஒரு நடிகர் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிட்டார் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் தனது அயராத உழைப்பு, விடா முயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை செய்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோதே தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டியராஜின் 'மெரினா' படம் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது முத்திரை நடிப்பை வெளிபடுத்திய சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷூக்கு நண்பராக '3' படத்தில் தோன்றினார். பின்னர் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த படம் 'எதிர்நீச்சல்'. இந்த படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு நெருங்க வழிவகை செய்தது.

பின்னர் 'மான் கராத்தே', 'காக்கி சட்டை' படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு 'ரஜினி முருகன்' படம் முன்னணி நடிகர்களின் பட்டியலை அவரை இணைத்தது மட்டுமின்றி வசூல் மன்னன் பட்டியலிலும் இடம்பிடித்தார். இந்த படத்திற்கு பின்னர் அவருடைய மார்க்கெட் மின்னல் வேகத்தில் எகிறியது என்று கூறலாம்.


பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த 'ரெமோ' படமும் வசூல் அளவில் வெற்றி பெற்றதோடு ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களையும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக நல்ல ஓப்பனிங் கொடுத்ததால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகிஸ்தர்களும் நல்ல லாபம் பெற்றனர். இதனால் அடுத்து வரும் சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உயரத்தை எட்டக்கூடிய திறமையும், அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே பெற்ற சிவகார்த்திகேயன், பல விருதுகளையும் புகழையும் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க நமது வாழ்த்துக்கள்.

More News

எனது அடுத்த படத்தில் சசிகலாவின் உண்மை முகம். பிரபல இயக்குனர்

உண்மை நிகழ்வுகளையும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் குறித்தும் திரைப்படம் எடுக்கும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா குறித்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்...

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டிலா?

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது...

தமிழ்நாட்டில் இப்போதுதான் பிரச்சனை தொடங்கியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா

தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

பத்தாம் வகுப்பை கூட பாஸ் செய்யாத சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் மனங்களை வென்ற ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியில் அமர முயன்ற சசிகலாவுக்கு விதி ஜெயில் பாதையை வழிகாட்டிவிட்டது. இதனால் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகியுள்ளார்...

சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மை கிடைக்குமா?

தமிழக முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கவர்னர் கொடுத்திருந்த போதிலும் வரும் சனிக்கிழமையே சட்டமன்றத்தை அவர் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.