4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா
Send us your feedback to audioarticles@vaarta.com
'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத அளவில் மேக்கப்பிற்காக மட்டும் 4 மணிநேரம் செலவு செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஷங்கரின் 'ஐ' மற்றும் 'The Lord of the Rings` போன்ற பல படங்களுக்கு மேக்கப் போட்ட Sean Foot' அவர்கள் மேக்கப் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு தேவையான மேக்கப் சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ஷங்கர் படத்திற்கு நிகராக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் உள்பட யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments