முதன்முதலாக துணிச்சலான முடிவை எடுத்த 'ரெமோ' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,September 28 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்று, வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்படும் பிரிமியர் காட்சிகளின் மூலம் தயாரிப்பாளருக்கு ஒரு பெருந்தொகை வசூலாகி வந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த பிரிமியர் காட்சிகள் மூலம்தான் திருட்டுடிவிடி பரவுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் திருட்டு டிவிடியை கட்டுப்படுத்த வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் வெளிநாட்டு பிரிமியர் காட்சியே இல்லாமல் 'ரெமோ' திரையிடப்படுகிறது. எனவே தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி திரையிடப்படும் காலைக்காட்சிதான் இந்த படத்தின் முதல் காட்சியாக இருக்க போகிறது.
இதன்மூலம் குறைந்தபட்சம் ரிலீஸ் ஆன முதல் நாளில் திருட்டு டிவிடி வெளியாவதை தடுக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. 'ரெமோ' தயாரிப்பாளரின் இந்த துணிச்சலான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தால் மற்ற தயாரிப்பாளர்களும் இதை பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனின் திடீர் மலேசிய பயணம் எதற்காக?

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி...

ஜப்பானில் 'ரெமோ' செய்த புதிய சாதனை

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே...

கோலிவுட்டின் 'நண்பன்' சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அறிமுகமாகி...

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் நாயகன் - நாயகி

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை அடுத்து பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'...

தனுஷ், விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் அவ்வப்போது பொதுநல சேவைகள் செய்து வருவதை பார்த்து வருகிறோம்...