'ரெமோ'வின் கேரக்டர்கள் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்துள்ள கேரக்டர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் அருண் என்ற கேரக்டரிலும் ரெமோ என்ற நர்ஸ் கேரக்டரிலும் நடித்துள்ளார். கீர்த்தி டாக்டர் காவ்யா வேடத்தில் கலக்கியுள்ளார். மேலும் வள்ளிகாந்த் என்ற கேரக்டரில் சதீஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் கே.எஸ்.,ரவிகுமார் ஆகியோர் அவர்களுடைய சொந்த பெயரிலேயே நடித்துள்ளனர்.
அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More News

சூர்யாவின் 'எஸ்3' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'எஸ்3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

சூர்யாவின் '24' படத்திற்கு கிடைத்த சர்வதேச பெருமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய '24' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது என்பது அனைவரும் அறிந்ததே...

ஏ ஆர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக - சென்னையில் மகேஷ் பாபு

தென்னிந்தியாவின் மிக அழகான நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மகேஷ்பாபுவும், இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான ஏ.ஆர்.முருகதாஸ்...

விஜய் நடனத்தை முயற்சி செய்த விக்ரம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

அஜித் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல காமெடி நடிகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...