'ரெமோ' படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 11 2016]

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருந்ததையும், இந்த படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த விவரங்களையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் மொத்தம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.74 கோடியும், செங்கல்பட்டில் ரூ.4.85 கோடியும், கோவையில் சுமார் 3 கோடியும் திருச்சி தஞ்சையில் ரூ.2 கோடியும் வசூல் செய்துள்ளது.
அதேபோல் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் சுமார் 6 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.65 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.1.25 கோடியும், கோவையில் ரூ.80 லட்சமும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீயான் விக்ரமின் 'சாமி 2' படத்தின் நாயகி இவரா?

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...

விரைவில் வெளியாகிறது அரவிந்தசாமி பாடிய பாடல்

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'தனி ஒருவன்' படத்தில் அட்டகாசமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்தசாமி...

'வேதாளம்' ரீமேக்கை இயக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஜில்லா' படத்தை இயக்கிய ஆர்.டி.நெல்சன் தற்போது தெலுங்கு பவர்ஸ்டார் பவன்கல்யாண்...

விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இந்த ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் என்றால் அது விஜய்சேதுபதி என்று உடனே கூறிவிடலாம். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அவர் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும்...

அஜித்தின் உயர்ந்த மனிதநேயத்திற்கு மேலும் ஒரு உதாரணம்

'தல' அஜித்தின் நடிப்பை பலர் விமர்சனம் செய்தாலும் அவரது மனித நேயத்தை இதுவரை அவரது எதிரிகள் உள்பட யாரும் தவறாக விமர்சனம் செய்ததே இல்லை...