'ரெமோ' இயக்குனர் அடுத்த படத்தில் இந்த நடிகர் ஹீரோவா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அதன் பிறகு கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைக்கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது

’இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘டி50’ ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’ போன்ற படங்களில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடைசி வாரத்துல ஜாலி பண்ணலாம்ன்னு நினைச்சேன்.. இப்படி பண்ணிட்டிங்களே: புலம்பிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் 'கடைசி வாரத்தில் ஜாலி பண்ணலாம்ன்னு என்று நினைத்தேன், ஆனால் இப்படி பண்ணிட்டீங்களே பிக்பாஸ்' என மாயா புலம்பும் காட்சிகள் உள்ளன. 

பிரதீப் பாத்ரூமில் தாழ் போடாமல் யூஸ் செய்த விவகாரம்... உண்மையை உளறிய விஷ்ணு-பூர்ணிமா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப், பாத்ரூமை தாழ் போடாமல் பயன்படுத்திய விவகாரம் கமல்ஹாசன் முன்னிலையில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட நிலையில் உண்மை

விஷ்ணு விஷால் அடுத்த படத்தை இயக்கும் விஜய் சேதுபதி-கார்த்தி பட இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை: சொன்னது யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என  வில்லேஜ் குக்கிங் சேனல்  சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்.

எனது அடுத்த படத்தின் கேரக்டர் இதுதான்.. நயன்தாரா வெளியிட்ட சூப்பர் புகைப்படம்..!

நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம்  சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படம்  ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின்