அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்
- IndiaGlitz, [Saturday,July 02 2022]
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல்'. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
எப்போதுமே இயக்குனர் சுந்தர்.சியின் படங்களில் நிச்சயமாக கலகலப்பான குடும்ப நடனப்பாடல் ஒன்று தவறாமல் இடம் பெறுவது வழக்கம். அதிலும் பழைய படங்களில் ஹிட்டான பாடல்களை அழகாக ரீமிக்ஸ் செய்து, அதற்கு படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் நடனம் ஆட வைத்து படம் ஆக்குவதில் சுந்தர் சி வித்தகர்.
இதற்கு முன்னதாக ஆம்பள படத்தில் இன்பம் கொஞ்சும் வெண்ணிலா வீசுதே, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் வாங்க மச்சான் வாங்க ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக்கால இளைஞர்களும் ரசிக்கும் விதமாக குடும்ப நடன பாடலாக அழகாக படமாக்கி இருப்பார் சுந்தர்.சி.
இந்த நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்திலும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் பாடல் குடும்ப நடன பாடலாக இடம் பெற்றுள்ளது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலும் குஷ்புவும் இணைந்து நடித்த எஸ்பிபியும் சித்ராவும் இணைந்து பாடிய ரம்பம் பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் என்கிற பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறது. படத்தில் நடித்த நட்சத்திரங்களும் இந்த பாடலுக்கு ஆடிப்பாடுவதாக இந்த நடனம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.