நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்...! தமிழக அரசாணை வெளியீடு...!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் இரண்டாயிரத்தை வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வந்த கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் பல மாத ஊரடங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால் சிறுகுறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இப்படி கடுமளவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வந்தது. இதேபோல் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணநிதியாக அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மறுபடியும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். அதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தவில், நாதஸ்வரம், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு நிவாரணத்தொகையாக 2000 ரூபாய் தருவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6,810 கலைஞர்கள் உள்ளடங்குவர்.ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.