கொரோனாவுக்கு Remdesivir சிகிச்சை: மருத்துவமனையில் தங்கும் நாட்களை 31% ஆக குறைந்துள்ளது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்து பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. முதன் முதலில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்தை பயன்படுத்தி நல்ல பலனைப் பெற்றதாகக் கூறப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது எனவும் குறைந்த நாட்களிலேயே நோயாளிகள் வீட்டுக்கு திரும்புவதாகவும் கூறப்பட்டது. கொரோனா நோயாளிகள் மற்ற சிகிச்சையில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டுமென்றால் Remdesivir மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகள் 10 நாட்களிலேயே வீடு திரும்பலாம் எனக் கூறப்பட்டது.
கொரோனா நோய் சிகிச்சைக்கு இதுவரை குறிப்பிடத்தக்க மருந்தோ அல்லது தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையில் Remdesivir மருந்து விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) இந்த மருந்து சிகிச்சையால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் விகிதம் 31% ஆக குறைந்து இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு உள்ளது. கடந்த மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்து பட்டியலில் Remdesivir மருந்தை சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 8 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு இதுவரை இந்த மருந்து கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களில் வயது காரணமாக ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்த மருந்து சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முடக்குவாதத்திற்கு வாதத்தில் நோய்க் கிருமியை குழப்பும் தன்மைக்கு இந்த மருந்து பயன்படுத்தப் படுகிறது. இந்நிலையில் கொரோன நோயாளிகளைத் தவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதுமான வரை இந்த மருந்து இருப்பு வைக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க தேசிய சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை மருந்து குறித்த பரிந்துரைக்கு எலி லில்லி நிறுவனம் கண்டுபிடித்த வீக்கத்துக்கான ஒலுமியண்ட் மற்றும் Remdesivir ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் தற்போது Remdesivir அதிக வரவேற்றை பெற்றிருக்கிறது.
அதையடுத்து Gilead Sciences மருந்து தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து பின்பு செயலிழந்து விடும். இதற்குமுன், இந்த Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின் போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout