கொரோனா சிகிச்சையில் வெற்றிபெற்ற Remdesivir!!! மருந்து தயாரிப்பில் இந்தியா முதற்கட்ட வெற்றி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையில் Remdesivir மருந்து கொடுக்கும்போது அவர்கள் நல்ல பலனை பெறுவதாகவும் குறைந்த நாட்களிலேயே வீடு திரும்புவதாகவும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து செயலிழந்துவிடும். கொரோனா நாவல் வைரஸ்க்குமுன் Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின்போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியா, கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தான கட்டத்தில் உதவும் இந்த மருந்தை தயாரிப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. KSMS எனப்படும் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப் பொருள்களை ஐதராபாத்தில் உள்ள Indian Institute of Chemical Technology விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தொகுத்திருக்கிறார்கள். மேலும் இந்த மருந்தை தயாரிப்பதற்கான காப்புரிமை சிகாகோவின் Gilead Sciences யிடம் மட்டுமே இருப்பதால் அப்பல்லைக்கழகத்திடம் உரிமை கோரவும் இந்தியா முடிவு செய்திருக்கிறது. ஒருவேளை உரிமை கிடைக்காத பட்சத்தில் கட்டாய உரிமை பெறும் சட்டத்தின்கீழ் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கொரோனா சிகிச்சையில் Remdesivir பயன்படுத்திய 125 நோயாளிகளில் 113 பேர் நல்ல முறையில் குணமடைந்தனர் என்று சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்துப் பல உலகநாடுகளும் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தை பயன்படுத்துவது பற்றிய ஆய்வை மேற்கொண்டன. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 237 கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மாதம் Remdesivir மருந்து செலுத்தப்பட்டது. சிலருக்கு Remdesivir மருந்தின் மாதிரியும் செலுத்தப்பட்டன. முடிவில் இதன் நல்ல பலனை தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
சீனாவில் Remdesivir மருந்து செலுத்தப்பட்டவர்களில் 13.9% பேரும், அதன்மாதிரி செலுத்தப்பட்டவர்களில் 12.8% பேரும் மரணத்தை தழுவினர். மேலும், பலருக்கு பக்க விளைவுகளும் ஏற்பட்டது. எனவே சிகாகோ Gilead Sciences பல்கலைக்கழகம் WHO விற்கு தவறான முடிவினை அளித்து விட்டதாக சீன விஞ்ஞானிகள் குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய முரண்பட்ட ஆய்வுமுடிவுகள் இருந்தாலும் இவையனைத்தும் பகுதி அளவு முடிவுகள் மட்டுமே என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர். கொரோனா சிகிச்சைக்கு தற்போதும் சில விஞ்ஞானிகள் Remdesivir மருந்தை பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவும் Remdesivir மருந்தின்மீது ஆர்வம் காட்டிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments