கொரோனா அவசரகால சிகிச்சைக்கு Remdesivir மருந்து!!! ஒப்புதல் வழங்கிய இந்தியா!!!
- IndiaGlitz, [Tuesday,June 02 2020]
இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir மருந்து நல்ல பலனைக் கொடுப்பதாக அமெரிக்காவின் Gilead Sciences நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடைவதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. எனவே உலகில் பல நாடுகளும் இந்த மருந்து உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து இந்தியாவும் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான பணியில் ஈடுபட்டது. தயாரிப்புக்காக காப்புரிமையும் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தைப் பயன்படுத்தி இதுவரை 8 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கும்போது அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாகவும் நம்பிக்கை அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு பெரிய நம்பிக்கை அளித்து வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அதிக பக்க விளைவுகளை கொடுப்பதாக WHO அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இந்தியா அந்த மருந்துக்கும் தடை விதித்தது. தற்போது Remdesivir மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த இந்தியா ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.