2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா? பிசிசிஐ சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது. இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் அணியைச் சார்ந்த 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2021 ஐபிஎல் மேட்சை ஒத்தி வைப்பதாக அதன் தலைவர் கங்குலி அறிவித்தார்.
அதோடு இந்த மேட்ச் ஒத்தி வைக்கப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் உறுதியாக நடத்தப்படும் என்றும் கொரோனா காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் வேறு ஒரு நாட்டில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இதற்காக இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் இந்த இரு நாடுகளிலும் தற்போது சுற்றுப்பயணப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதனால் 2021 சீசனில் மீதம் உள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கடந்த 13 ஆவது சீசன் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாதுகாப்பாக நடைபெற்றது.
எனவே 14 ஆவது சீசனில் மீதம் உள்ள போட்டியை அங்கேயே நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் போட்டிகள் வரும் செப்டம்பர் 18- அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பிசிசிஐ விரைவில் தெரியப்படுத்தும்.
NEWS ?? : BCCI to conduct remaining matches of VIVO IPL in UAE.
— IndianPremierLeague (@IPL) May 29, 2021
More details here - https://t.co/r7TSIKLUdM #VIVOIPL pic.twitter.com/q3hKsw0lkb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments