ரிலையன்ஸ் ஜியோ சிம் வாடிக்கையாளருக்கு ரூ.28000 பில்?
Wednesday, November 23, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம்-ஐ வாங்க சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் ஆர்வம் காட்டினர். டிசம்பர் 31வரை அழைப்புகள் மற்றும் 4ஜி இண்டர்நெட் இலவசம் என்பதால் மணிக்கணக்கில் காத்திருந்து ஜியோ சிம்-ஐ பலர் வாங்கினர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொல்கத்தாவை சேர்ந்த ஜியோ சிம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.27718க்கு பில் அனுப்பியுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதனால் ஜியோ உபயோகிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கும் பில் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது. முழுக்க முழுக்க இது வதந்தி என்றும் தாங்கள் பேப்பர் பில்கள் அனுப்புவதில்லை என்றும் முழுக்க முழுக்க டிஜிட்டல் பில்களை மட்டுமே அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளது. அந்த போலி பில்லில் குறிப்பிட்டபடி 'ரிலையன்ஸ் வெல்கம் பிளான்' என்பதே கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments