ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்
- IndiaGlitz, [Wednesday,July 05 2017]
இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. 2ஜி சேவையை மட்டுமே பயன்படுத்திய வந்த இந்திய மக்களை திடீரென 4ஜிக்கு மாற்றிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனத்திற்கு தற்போது 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜியோவின் கோடை ஆஃபர் இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஆஃபர் ஒன்றை ஜியோ இம்மாதம் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 2ஜி, 3ஜி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.500க்கு '4ஜி வோல்ட் இ' போன் விற்பனை செய்யும் திட்டத்தை ஜியோ தொடங்கவுள்ளதாகவும், இந்த புதிய போன் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது என்பதும் மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.