ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய ஜியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் உலக அளவில் மாபெரும் சாதனை புரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக இந்திய திரைப்படங்களில் வேறு எந்த படத்தின் டிரைலரும் நெருங்க முடியாத அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டம், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா ஆகியோர்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம், 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி என 'பாகுபலி 2' படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றி என்று கூறினாலும் இன்னொரு முக்கிய விஷயம் இந்த சாதனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதுதான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சலுகை. தினம் 1GB இலவச டேட்டா காரணமாக லட்சக்கணக்கானோர் 'பாகுபலி 2' படத்தின் டீசரை மீண்டும் மீண்டும் பார்த்து அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.
இந்நிலையில் 'பாகுபலி 2' டிரைலர் சாதனையை நெருங்கும் அல்லது முறியடிக்கும் அளவுக்கு உள்ள ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' என்று கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஜியோ சலுகை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதன்பின்னர் டேட்டாவுக்கு அனைவரும் கட்டணம் கட்ட வேண்டிய நிலை வரும். எனவே இதன் காரணமாக 'பாகுபலி 2' பார்வையாளர்களின் எண்ணிக்கையை நெருங்க முடியுமா என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் கவலையை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஷங்கரின் பிரமாண்டம், ரஜினியின் ஸ்டைல், ரஹ்மானின் பின்னணி இசை ஆகியவை காரணமாக ரசிகர்கள் டேட்டாவுக்கு கட்டணம் கட்டியாவது 'பாகுபலி 2' சாதனையை முறியடிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments