டாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் நிதியுதவி குறித்த அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவையும் ஆட்டுவித்து வருவது தெரிந்ததே.
கொரோனா வைரஸிடமிருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்களும் திரையுலக பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை டாடா நிறுவனம் 1500 கோடி, அதானி குழுமம் 100 கோடி, கோடக் மகேந்திரா வங்கி 50 கோடி, பிசிசிஐ 51 கோடி, அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் தெண்டுல்கர் ரூ.25 லட்சம் என கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மத்திய அரசுக்கு இந்தியுதவி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 500 கோடி கொரோனா தடுப்பி நிதியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 100 பெட்கள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றை முகேஷ் அம்பானியின் நிறுவனம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Reliance Industries announces Rs 500 crore contribution to #PMCARES Fund In addition to its multi-pronged on-the-ground fight against Covid-19 #RIL #CoronaHaaregaIndiaJeetega pic.twitter.com/06Rsm4XLaX
— Reliance Foundation (@ril_foundation) March 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments