ரிலீஸ் தேதி குறித்து 'கடாரம் கொண்டான்' படக்குழுவினர் விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,April 14 2019]

விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் எம்.ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புகைப்படம் வெளியானதே இந்த செய்தி பரவ காரணமாக இருந்தது.

ஆனால் இந்த ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். 'கடாரம் கொண்டான்' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று வெளியான ரிலீஸ் தேதி வதந்தி என்பது தெரிய வருகிறது.


ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ளனர்.