அஜீத்தின் முதலாளி ஆகிறார் சூரி?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக நடித்து வருவதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, அஜீத் கால் டாக்சி ஓட்டுபவராகவும், அவருக்கு முதலாளியாக சூரி நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் கால்டாக்சி ஏஜன்ஸி வைத்து நடத்தும் சூரியிடம் அஜீத் டிரைவராக பணிபுரியும் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இருவருக்கும் இடையே கலக்கலான காமெடி காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராகவும், தம்பி ராமையா பார்வை தெரியாத பணக்காரர் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அஜீத்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன், கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், ராகுல்தேவ், கபீர்சிங், தம்பி ராமையா, சூரி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments