அஜீத்தின் முதலாளி ஆகிறார் சூரி?

  • IndiaGlitz, [Thursday,October 15 2015]

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக நடித்து வருவதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, அஜீத் கால் டாக்சி ஓட்டுபவராகவும், அவருக்கு முதலாளியாக சூரி நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் கால்டாக்சி ஏஜன்ஸி வைத்து நடத்தும் சூரியிடம் அஜீத் டிரைவராக பணிபுரியும் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இருவருக்கும் இடையே கலக்கலான காமெடி காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராகவும், தம்பி ராமையா பார்வை தெரியாத பணக்காரர் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அஜீத்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன், கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், ராகுல்தேவ், கபீர்சிங், தம்பி ராமையா, சூரி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எம்.எல்.ஏ ஆகிறார் 'மெட்ராஸ்' நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தின் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை கேதரின் தெரசா...

பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் யார்? புதிய தகவல்

கோபுர வாசலிலே', காஞ்சிவரம்' போன்ற தமிழ் படங்களையும் ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷன்...

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

ஆட்டம் போட வைத்த 'ஆலுமா டோலுமா' டீசர்

அஜீத் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'வேதாளம்' படத்தின் 'ஆலுமா டோலுமா' என்ற பாடலின் டீசர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு...

ஏழைக்குழந்தைகளின் கனவு நனவாக விஜய் கொடுத்த ரூ.5 லட்சம்

இளையதளபதி விஜய் சத்தமில்லாமலும் விளம்பரங்கள் இன்றியும் பல உதவிகளை செய்து வருவதை....