விஜய் சாதாரணமாக நடந்து வந்தாலே மாஸ் ஆக இருக்கும். விஜய்சேதுபதி பட நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு தோழியாகவும், 'றெக்க' படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகவும், 'கவண்' படத்தில் விஜய்சேதுபதியின் டீமில் ஒருவராகவும் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தங்கை, தோழி வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது புரமோஷன் ஆகி 'திருப்பதிசாமி குடும்பம்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது: எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான். அவர் சாதாரணமாக நடந்து வந்தாலே ஒரு மாஸாக இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அவருடன் கண்டிப்பாக டூயட் பாட வேண்டும் என்பது எனது கனவு. அதேபோல், அஜித், சூர்யாவுடன் டூயட் பாடுவதும் எனது சினிமா கனவு.
எனது ரோல் மாடல் நடிகை சமந்தா தான். முதல் படத்தில் இருந்தே சவாலான வேடங்களில் நடித்து வரும் சமந்தா போன்று ஒரு நடிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை
விஜய்சேதுபதியுடன் நடித்தபோது அவர் எனக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்தார். அவரது மனைவியும் எனக்கு உற்சாகம் தருவார். நான் அவருடைய குடும்பத்திற்கே நன்றிக்கடன் பட்டுள்ளேன். விரைவில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout