அன்றைய முதல்வரும் காவல்துறையும் சரியில்லை: விஜே சித்ரா மரணம் குறித்து தோழியின் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சித்ராவின் கணவர் ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது திரையுலகினர் உள்பட அனைவரும் கிட்டத்தட்ட இந்த வழக்கை மறந்து விட்டார்கள் என்பதும் ஹேமந்த் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த செய்திகள் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான ரேகா நாயர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’அன்றைய முதல்வரும் காவல்துறையும் சரி இல்லை என்றும் இனியாவது இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவு இதோ.
விஸ்மய நாயர், சித்ரா இருவருக்கும் நடந்தது கிட்டத்தட்ட ஒரே போல் உள்ள நிகழ்வுதான். கேரளா காவல்துறை, கேரளாவின் மந்திரிகள், கேரளாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சில அதிகாரிகளும் கேரளா முதல்வர் உட்பட எல்லோரும் இதற்கு முன்னெடுத்து அந்த மரணத்தை தீர விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற ஆட்சியில் இதைப்பற்றி எந்த பேச்சும் இல்லாமல் நடந்து முடிந்தது. விஷ் மாயாவின் பெற்றோர்களைப் போல சித்ராவின் பெற்றோர்களுக்கு மன தைரியம் இல்லை. தமிழகத்தில் அன்றைய காவல்துறையும் அன்றைய முதல்வரும் அன்றைய மந்திரிகளும் அப்படி தகுதி வாய்ந்தவர்களாக இல்லை.
ஆனால் நிச்சயம் இனிவரும் நாட்களில் இதை தக்கபடி ஆராய்ச்சி செய்து தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்னும் பல பெண்களின் வாழ்க்கைக்கு ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் தமிழக காவல்துறை திகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ரேகா நாயர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள கேரளாவை சேர்ந்த விஸ்மயா வி நாயர் என்ற 24 வயது பெண் தனது கணவர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments