தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்.. 500 பேர் சிக்குவர்.. நடிகை ரேகா நாயர்

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர் என்றும், தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன என்றும் நடிகை ரேகா நாயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேசி வருவதால் தமிழ் சினிமாவிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபல ஹீரோக்கள் கருத்து தெரிவிக்காமல் மழுப்பி வருவதை அடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகள் புகார் கொடுக்க ஆரம்பித்து கமிஷன் அறிக்கை வெளியானால் பல முக்கிய நட்சத்திரங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தைரியமாக தனது கருத்துக்களை பேட்டியில் முன்வைக்கும் நடிகை ரேகா நான் யார் இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது ’தமிழ் சினிமா மட்டுமல்ல, அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் மட்டும் இது குறித்து விசாரணை செய்து ஏதேனும் அறிக்கை வெளியானால் 500 பேருக்கு மேல் சிக்குவார்கள்.

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளது, அது மட்டும் இன்றி புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டல் ஏற்படுகிறது’ என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் GOAT, மனம் திறக்கும் வெங்கட் பிரபு

கடந்த சில நாட்களாகவே GOAT திரைப்படம் குறித்த hype அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்களில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று பேசப்பட்டு வருகிறது.

மாஸ் நடிகரின் படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்த சிம்பு.. வேற லெவல் தகவல்..!

மாஸ் நடிகரின் படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கூலி' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. 'தளபதி' படத்துடன் கனெக்சனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்

தமிழ் திரையுலகிலும் தவறு இருக்கிறது: நடிகைகளுக்கு பாலியல் கொடுமை குறித்து ராதிகா..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நிலையில் தமிழ் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல்

'விசில் போடு' பாடல் 'கோட்' படத்தில் இல்லையா? வெங்கட் பிரபு கூறிய ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் 'விசில் போடு' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது