தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்.. 500 பேர் சிக்குவர்.. நடிகை ரேகா நாயர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர் என்றும், தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன என்றும் நடிகை ரேகா நாயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேசி வருவதால் தமிழ் சினிமாவிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபல ஹீரோக்கள் கருத்து தெரிவிக்காமல் மழுப்பி வருவதை அடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகள் புகார் கொடுக்க ஆரம்பித்து கமிஷன் அறிக்கை வெளியானால் பல முக்கிய நட்சத்திரங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தைரியமாக தனது கருத்துக்களை பேட்டியில் முன்வைக்கும் நடிகை ரேகா நான் யார் இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது ’தமிழ் சினிமா மட்டுமல்ல, அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் மட்டும் இது குறித்து விசாரணை செய்து ஏதேனும் அறிக்கை வெளியானால் 500 பேருக்கு மேல் சிக்குவார்கள்.
தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளது, அது மட்டும் இன்றி புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டல் ஏற்படுகிறது’ என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com