திருமணமான எம்.எல்.ஏவுடன் திருமணமா? நடிகை ரேகா நாயர் கொடுத்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரேகா நாயர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர் என்றும் அவர் அடிக்கடி அளிக்கும் பேட்டி குறித்த செய்திகள் இணையதளத்தில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்தது.
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் அவர் வித்தியாசமான வேடத்தில் நடித்த ரேகா நாயர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரை மோசமாக விமர்சனம் செய்த ஒரு பத்திரிகையாளரை கடற்கரையில் அவர் நேருக்கு நேர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்களின் உரிமை குறித்தும் பெண்களின் சுதந்திரம் குறித்தும் தைரியமாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குறிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அவரது பேட்டிகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் பெண்கள் குறித்து பல விழிப்புணர்வு கருத்துக்களை கூறும் ரேகா நாயர் திருமணம் ஆன எம்எல்ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட எம்எல்ஏ அப்பா தனக்கு பழக்கமானவர் என்றும் ஒன்றாகத்தான் மாரத்தான் ஓடுவோம் என்றும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் காலையில் வாக்கிங் போகும்போது அவர் அறிமுகமானார் என்றும் அவர் மூலமாக அவருடைய குடும்பத்தினர் அனைவருமே தனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்
மேலும் தனக்கு பல எம்எல்ஏக்கள் அமைச்சர்களை தெரியும் என்றும் வதந்திகளில் வெளியாகும் எம்எல்ஏவும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் வேண்டும் என்றால் நீங்கள் அந்த எம்எல்ஏவிடமே போய் கேளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments