பிரபல நடிகருடன் காதலா? நடிகை ரெஜினா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரெஜினா, தெலுங்கு நடிகருடன் காதல் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி, வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜூக்கும் ரெஜினாவுக்கும் காதல் என சமூக வலைத்தளங்களிலும், ஒருசில இணையதளங்களிலும் செய்திகள் பரவி வருகிறது. இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து ரெஜினா விளக்கம் அளித்துள்ளார். 'பிரபல தெலுங்கு நடிகருடன் காதல் என்ற உண்மைக்கு மாறான வதந்தி பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை. எனது ஒரே காதல் நடிப்பு தான். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ரெஜினா தற்போது 'பார்ட்டி', 'கள்ளபார்ட்' மற்றும் '7' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments